பிற விளையாட்டு

மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெற்றி + "||" + Monaco Formula 1 car race: Netherlands player wins

மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெற்றி

மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெற்றி
மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.
மான்ட்கார்லோ, 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி அங்குள்ள மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 260.286 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறினர். இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 56.820 வினாடிகளில் இலக்கை நடந்து வெற்றி பெற்றதுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் தனதாக்கினார். அவரை விட 8.968 வினாடி பின்தங்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்ஸ் (பெராரிஅணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். 7 முறை உலக சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) இந்த முறை 7-வது இடத்துக்கு பின்தங்கி ஏமாற்றத்திற்குள்ளானர். இருப்பினும் அதற்குரிய 7 புள்ளி கிடைத்தது.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் இதுவரை முதலிடத்தில் இருந்த ஹாமில்டன் தற்போது 101 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வெர்ஸ்டப்பென் 105 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இதன் 6-வது சுற்று போட்டி வருகிற 6-ந்தேதி அஜர்பைஜானில் நடக்கிறது.