பிற விளையாட்டு

பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Famous runner Milkha Singh admitted to hospital

பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவரது மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் கூறுகையில், ‘பலவீனமாக இருப்பதாலும், சரியாக சாப்பிடாததாலும் முன்னெச்சரிக்கையாக எனது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறோம். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இருப்பினும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அனுமதித்து உள்ளோம். அவர் விரைவில் குணமடைவார்’ என்றார்.