ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் இந்திய வீரர் ஹூசாமுதீன் தோல்வி


ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் இந்திய வீரர் ஹூசாமுதீன் தோல்வி
x
தினத்தந்தி 25 May 2021 11:55 PM GMT (Updated: 2021-05-26T05:25:14+05:30)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன், உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் மிராஜிஸ்பெக் மிர்சாஹலிலோவை சந்தித்தார். இதில் முகமது ஹூசாமுதீன் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். முந்தைய நாள் இரவில் நடந்த 81 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் சங்வான் 
தோற்று ஏமாற்றம் அளித்தார்.

Next Story