பிற விளையாட்டு

உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார் + "||" + World Junior Weightlifting: Achinta Sheuli wins silver medal

உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அசிந்தா ஷிலி ‘ஸ்னாட்ச்’ முறையில் 141 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 172 கிலோவும் என மொத்தம் 313 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இந்தோனேஷியா வீரர் ஜூனியன்யா ரிஸ்கி ‘ஸ்னாட்ச்’ முறையில் 155 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 194 கிலோவும் என மொத்தம் 349 கிலோ எடை தூக்கி புதிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.