ஆசிய குத்துச்சண்டை: மேரிகோம், சாக்‌ஷி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


சாக்‌ஷி
x
சாக்‌ஷி
தினத்தந்தி 27 May 2021 11:22 PM GMT (Updated: 2021-05-28T04:52:04+05:30)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில், 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரிகோம் 4-1 என்ற கணக்கில் மங்கோலியா வீராங்கனை லுத்சாய்கான் அல்டான்ட்செட்செக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 54 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டினா ஜோலாமானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


Next Story