பிற விளையாட்டு

முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் ஐ.சி.யூ.வில் அனுமதி + "||" + Former Indian athlete Milkha Singh admitted to ICU

முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் ஐ.சி.யூ.வில் அனுமதி

முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் ஐ.சி.யூ.வில் அனுமதி
முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் கொரோனா மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சண்டிகர்,

இந்திய தடகள வீரர்களில் ஒருவரான மில்கா சிங் (91 வயது) சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதனையடுத்து மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டனர்.  இதனையடுத்து அவர் கடந்த மே மாத இறுதியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி நிர்மல் கவுருக்கு தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மில்கா சிங்கிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்து உள்ளது.  இதனால், சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சேர்க்கப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.  அவரது நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி
தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி.
2. யோகா செய்த முன்னாள் மத்திய மந்திரி மயக்கம்; ஐ.சி.யூ.வில் அனுமதி
யோகா செய்தபோது மயக்கம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3. கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு
கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சா்வதேசப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பிரான்ஸ் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
4. கான்வர் யாத்திரைக்கு அனுமதி: உத்தரபிரதேச அரசு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
கான்வர் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உத்தரபிரதேச அரசு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5. கேரளா: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் 1 மணிநேரம் வைக்க அனுமதி
கேரளாவில் கொரோனா நோயாளிகள் உடலை எடுத்து சென்று வீட்டில் 1 மணிநேரம் வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.