பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தகுதி + "||" + Tokyo Olympics Indian bomber Tajinder Singh qualifies

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தகுதி
தஜிந்தர் சிங் தூர் 21.49 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
பாட்டியாலா, 

இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப்பை சேர்ந்த 26 வயது தஜிந்தர் சிங் தூர் 21.49 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டில் தஜிந்தர் சிங் தூர் 20.92 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. குண்டு எறிதலில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 21.10 மீட்டர் ஆகும். தஜிந்தர் சிங் தூர் 2018-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு மற்றும் 2019-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஒடிசாவை சேர்ந்த டுடீ சந்த் 11.17 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார். ஆனாலும் அவரால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி (11.15 வினாடி) பெற முடியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கஷ்ட காலத்தில் உதவிய 150 லாரி டிரைவர்களுக்கு விருந்து ; மனிதே நேய மங்கை மீராபாய் சானு
பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
2. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
3. டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.