டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ப் வீரர் லஹிரி தகுதி


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ப் வீரர் லஹிரி தகுதி
x
தினத்தந்தி 22 Jun 2021 11:59 PM GMT (Updated: 2021-06-23T05:29:29+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ப் வீரர் லஹிரி தகுதி பெற்று இருக்கிறார்.

புதுடெல்லி,

உலக கோல்ப் தரவரிசையில் 340-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் கோல்ப் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு வீரர் தகுதி பெற முடியும். சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக கோல்ப் வீரர்கள் தரவரிசையில் இந்திய வீரர்களில் முதன்மையான இடத்தை பிடித்த அனிர்பன் லஹிரி, ஒலிம்பிக் போட்டிக்கான தரநிலையில் 60-வது இடத்தை பிடித்து தகுதி கண்டுள்ளார். கோல்ப் விளையாட்டு ஒலிம்பிக்கில் கடந்த முறை (2016-ம் ஆண்டு) சேர்க்கப்பட்டது. அந்த போட்டிக்கு தகுதி பெற்று இருந்த லஹிரி தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்.


Next Story