ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார் சிந்து?


ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார் சிந்து?
x
தினத்தந்தி 26 Jun 2021 12:42 AM GMT (Updated: 26 Jun 2021 12:42 AM GMT)

ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்.

புதுடெல்லி,

32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்குகிறது. இதன் கோலாகலமான தொடக்க விழாவில் அணிவகுத்து செல்லும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் இந்த முறை ஒரு வீரர், ஒரு வீராங்கனைக்கு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன்படி 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார். வீராங்கனைகளில் அனேகமாக அவருக்கு தான் இந்த வாய்ப்பு கிட்டும். வீரர்களில் நீரஜ் சோப்ரா (தடகளம்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்), அமித் பன்ஹால் (குத்துச்சண்டை) உள்ளிட்டோரின் பெயர் அடிபடுகிறது.

Next Story