ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் காயம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்


ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் காயம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்
x
தினத்தந்தி 27 Jun 2021 2:03 AM GMT (Updated: 27 Jun 2021 2:03 AM GMT)

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது.

பாட்டியாலா, 

நேற்று காலை நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்றில் அசாமை சேர்ந்த முன்னணி வீராங்கனையான ஹிமா தாஸ் கலந்து கொண்டு ஓடுகையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனை சமாளித்து ஓடிய அவர் 12.01 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் அவர் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவரது காயத்தின் தன்மை குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் இன்று நடைபெறும் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்று போட்டி இதுவாகும். இதனால் ஹிமா தாஸ்சின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு கேள்விக்குறியாகி இருக்கிறது.

Next Story