ரஷிய மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் பூனியா முழங்காலில் காயம்


ரஷிய மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் பூனியா முழங்காலில் காயம்
x
தினத்தந்தி 27 Jun 2021 2:44 AM GMT (Updated: 2021-06-27T08:14:59+05:30)

ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தகுதி பெற்று இருக்கிறார்.

புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்படும் பஜ்ரங் பூனியா இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக ரஷியாவில் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு நடந்த போட்டியின் அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, 23 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான அப்துல் மஜித் குடிவுடன் மோதினார். இந்த போட்டியின் போது அப்துல் மஜித், பஜ்ரங் பூனியாவின் வலது காலை பிடித்து மடக்க முயற்சித்தார். அப்போது பஜ்ரங் பூனியாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. வலி அதிகரித்ததால் அவர் உடனடியாக போட்டியில் இருந்து விலகினார். பஜ்ரங் பூனியாவுக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்தின் தீவிரம் குறித்து 48 மணி நேரத்துக்கு பிறகு தான் முழுமையாக தெரிய வரும். தற்போது அது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நான் நல்ல நிலையில் இருக்கிறேன். விளையாட்டில் காயம் ஏற்படுவது சகஜம் தான்’ என்று பஜ்ரங் பூனியா தெரிவித்தார்.

Next Story