100, 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


100, 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 1 July 2021 1:15 PM GMT (Updated: 2021-07-01T18:45:11+05:30)

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தீவிரமாக தயாராகி வந்தார்.

புதுடெல்லி, 

இந்திய மின்னல் வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தீவிரமாக தயாராகி வந்தார். ஆனால் நேரடியாக தகுதி பெறும் முயற்சியில் தோற்று போனார். தற்போது நடந்து வரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் கூட 100 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் அவர் உலக தரவரிசை கோட்டா அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார். உலக தரவரிசை கோட்டாவில் 100 மீட்டர் ஓட்டத்தில் 22 இடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் 15 இடமும் உண்டு. இந்த வழியில் டுட்டீ சந்துக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இவ்விரு ஓட்டங்களில் தரவரிசையில் டுட்டீ சந்த் முறையே 44 மற்றும் 51-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story