டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய நீச்சல் வீராங்கனை தகுதி


டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய நீச்சல் வீராங்கனை தகுதி
x
தினத்தந்தி 2 July 2021 5:27 AM GMT (Updated: 2021-07-02T10:57:21+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி பெற்றுள்ளார்.

புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக்கில் 2021 க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும்  மூன்றாவது நீச்சல் வீரர் என்ற பெருமையை மானா படேல் பெற்றுள்ளார். மானா படேல் அகமதாபாத்தைச் சேர்ந்த பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர் .21 வயதான மானா படேல் 50 மற்றும்  200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில்  தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் (2015) 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு  படேல் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவில் ஒரு நீச்சல் வீரர் ஒலிம்பில் நுழைந்ததைக் குறித்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் முன் 2018 ஆம் ஆண்டில், 72 வது மூத்த தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் படேல் மூன்று தங்கப் பதக்கங்களைப் வென்றார். அதே 2018 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடந்த சீனியர் தேசிய போட்டிகளில்  படேல் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும்  பதக்கங்களை கைப்பற்றினார்.

ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே  ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் சஜன் பிரகாஷ் நீச்சல் வீரர்கள் தேர்வு பெற்று உள்ளனர்.

மானா படேலுக்கு  மத்திய விளையாட்டுதுறை  மந்திரி கிரண் ரிஜிஜு டுவிட்டரில்  வாழ்த்து தெர்வித்து உள்ளார். "பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர் மனா படேல்  டோக்கியோ 2020 க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் 3 வது இந்திய நீச்சல் வீரர் ஆவார், யுனிவர்சிட்டி ஒதுக்கீட்டின் மூலம் தகுதி பெற்ற மானாவை நான் வாழ்த்துகிறேன். நல்லது !! என கூறி உள்ளார்.


Next Story