பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு 24 பேர் தேர்வு


பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு 24 பேர் தேர்வு
x
தினத்தந்தி 3 July 2021 10:42 PM GMT (Updated: 2021-07-04T04:12:29+05:30)

பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி முடிந்ததும் அங்கேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை நடக்கிறது. பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி 2 நாள் தகுதி போட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. 

இதன்படி இந்திய அணியில் 4 வீராங்கனைகள் உள்பட 24 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் ஈட்டி எறிதல் வீரர் தேவந்திர ஜஜாரியா, உயரம் தாண்டுதல் வீரர் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முந்தைய பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story