பிற விளையாட்டு

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சுமித் மாலிக் தடையை எதிர்த்து அப்பீல் செய்கிறார் + "||" + Sumit Malik, who was caught in a stimulant drug test, is appealing against the ban

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சுமித் மாலிக் தடையை எதிர்த்து அப்பீல் செய்கிறார்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சுமித் மாலிக் தடையை எதிர்த்து அப்பீல் செய்கிறார்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சுமித் மாலிக் தடையை எதிர்த்து அப்பீல் செய்கிறார்.
புதுடெல்லி,

பல்கேரியா தலைநகர் சோபியாவில் கடந்த மே மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று உலக மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய 28 வயதான சுமித் மாலிக்குக்கு, கடந்த வெள்ளிக்கிழமை உலக மல்யுத்த சம்மேளனம் 2 ஆண்டு தடை விதித்தது. தடையை எதிர்த்து அப்பீல் செய்ய அவருக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுமித் மாலிக் அப்பீல் செய்ய முடிவு செய்து இருக்கிறார். அதில் தெரியாமல் தான் இழைத்த தவறுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி வேண்டுகோள் விடுப்பார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலங்கானாவில் ட்ரோன் மூலம் மருந்து பொருட்களை அனுப்பும் திட்டம் தொடக்கம்
தெலங்கானாவில் ட்ரோன்கள் மூலமாக மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.