பிற விளையாட்டு

புறாக்களை கொன்றால் பதக்கம் + "||" + Medal for killing pigeons

புறாக்களை கொன்றால் பதக்கம்

புறாக்களை கொன்றால் பதக்கம்
1900-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்திற்கு இலக்கை சுடுவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உயிருள்ள பிராணி (புறா) இலக்காக பயன்படுத்தப்பட்ட ஒரே ஒலிம்பிக் இது தான்.
இதில் போட்டியாளர்கள் முன் புறாக்கள் பறக்க விடப்படும். அதிக புறாக்களை கொல்லும் வீரர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவாா்கள். தொடர்ந்து இரண்டு முறை குறி தவறினால் அந்த வீரர் வெளியேற்றப்படுவார். இதன் அடிப்படையில் நடந்த இந்த போட்டியில் ரத்த வெள்ளத்தில் காயத்துடன் கிடந்த புறாக்களையும் கணக்கிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இறுதியில் பெல்ஜியத்தின் லியோன் டி லுன்டென் 21 புறாக்களை கொன்று முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஏறக்குறைய 300 புறாக்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகின.