பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு + "||" + Olympics host city Tokyo bans spectators amid COVID-19 emergency

ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் (நேற்று புதிதாக 896 பேருக்கு தொற்று) வருகிற 12-ந் தேதி முதல் பிரதமர் யோஷிஹிடே சுகா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
இது அடுத்த மாதம் 22-ந் தேதி வரை நீடிக்கும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க 2 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

அவசரநிலை எதிரொலியாக ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் மந்திரி தமயோ மருகவா அறிவித்துள்ளார். முதலில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிைய பார்க்க ஸ்டேடியத்திற்குள் உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 
அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்ேபாது அதுவும் இல்லை என்றாகி விட்டது. இந்த ஒலிம்பிக் திருவிழா ரசிகர்கள் இன்றி வித்தியாசமான அனுபவத்தை சந்திக்கப்போகிறது. 

ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மூலம் ஒட்டுமொத்தத்தில் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று ேபாட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். இனி டிக்கெட் வருவாய் துளியும் கிடைக்காது என்பதால் அந்த வகையில் ஒலிம்பிக் கமிட்டி பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பழங்குடியின குழந்தைகள்
டெல்லியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய பயிற்சியாளர் கரண் சிங். இவருக்கு ஒலிம்பிக் தடகள போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. ஆனால், தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கனவு பாதியிலேயே கரைந்து போனது. எனினும், தனது ஆசையைக் கைவிடாத அவர் பத்து பழங்குடியின சிறுவர்-சிறுமிகளைத் தேர்வு செய்து பயிற்சியளித்து வருகிறார்.
2. ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது.
3. ஒலிம்பிக் போட்டிக்கு 5 ஆயிரம் பதக்கங்கள் தயார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 339 பந்தயங்களில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அத்துடன் 2-வது, 3-வது இடம் பெறுபவர்களுக்கு முறையே வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
4. ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
5. ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர்.