பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி: ஜூலை 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது இந்திய குழு + "||" + First batch of Indian athletes to depart for Tokyo Olympics on July 17: IOA

ஒலிம்பிக் போட்டி: ஜூலை 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது இந்திய குழு

ஒலிம்பிக் போட்டி: ஜூலை 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது இந்திய குழு
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது.
புதுடெல்லி

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா தெரிவித்துள்ளார்.

முதல் தொகுதி விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஜூலை 14 ஆம் தேதி புறப்பட்டு டோக்கியோ சென்று அங்கு  மூன்று நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் விரும்பியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி பதக்க வாய்ப்பு: முழு விவரம்

ஆனால் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் டோக்கியோ அமைப்புக் குழுவிற்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை.
இதனால் 90 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய இந்த முதல் குழு, ஏர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்படவுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வராதாது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம், கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பயணத்தை திட்டமிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜூலை 13ம் தேதி மாலை 5 மணிக்கு  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.