பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் டோக்கியோவில் மாயம் + "||" + Tokyo Games: Ugandan Weightlifter Julius Ssekitoleko Missing In Japan Before Olympics

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் டோக்கியோவில் மாயம்

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர்  டோக்கியோவில் மாயம்
ஜப்பானில் காணமல் போன உகாண்டா நாட்டு ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
டோக்கியோ

20 வயதான உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார். மேற்கு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற நகரத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நேற்று  நள்ளிரவு முதல் காணவில்லை. கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.

உகாண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால், ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அருகிலுள்ள ரெயில் நிலையம் அவர் மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் ரெயிலில் ஏற  டிக்கெட் வாங்கியதை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செகிடோலெக்கோ தகுதி பெறவில்லை, அடுத்த செவ்வாயன்று உகாண்டாவுக்கு திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கஷ்ட காலத்தில் உதவிய 150 லாரி டிரைவர்களுக்கு விருந்து ; மனிதே நேய மங்கை மீராபாய் சானு
பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
2. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
3. டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.