பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona exposure confirmed for 2 athletes at Tokyo Olympic Village

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23ந்தேதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனிடையே டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீரர்கள் கிராமத்தில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுதான் என்று  டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவின் செய்தி தொடர்பாளர் மாசா தகாயா தெரிவித்துள்ளார்.  இருப்பினும், தகாயா அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று வெளியிடவில்லை.

டோக்கியோவில் தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது, அங்கு நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 1ந்தேதியில் இருந்து போட்டியுடன் தொடர்புடைய மொத்தம் 55 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கொரியா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரி ரியூ சியூங்-மின் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர், கடந்த 2004ம் ஆண்டில் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிசில் கலந்து கொண்டு தங்கம் வென்றவர்.

ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று அடையாளம் தெரிவிக்கப்படாத நபருக்கு தொற்று உறுதியான நிலையில், புதிய பாதிப்புகளால் மொத்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

இதனால், டோக்கியோவில் பாதுகாப்பு நிறைந்த போட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என உறுதிமொழி அளித்திருந்த நிலையில், புதிய கொரோனா பாதிப்புகள் அதில், சந்தேகம் கிளப்பியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 956 பேருக்கு சிகிச்சை
புதுச்சேரியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு உறுதி
“இன்னும் ஒரு வாரத்தில் உரிய சட்ட போராட்டத்தின் மூலம் குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
5. கேரளாவில் செப்டம்பர் 1ல் இருந்து 3 ஆயிரத்திற்கும் கூடுதலான கொரோனா உயிரிழப்புகள்
கேரளாவில் செப்டம்பர் 1ந்தேதியில் இருந்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் கூடுதலான கொரோனா உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.