பிற விளையாட்டு

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் ...? உண்மை என்ன...? + "||" + Tokyo Olympics Anti-sex beds are fake news

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் ...? உண்மை என்ன...?

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு  'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் ...? உண்மை என்ன...?
டோக்கியோ ஒலிம்பிக் கிரமத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க விளையாட்டு வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் வழங்கப்படுகிறது என்பது உண்மைல்ல என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர்.  இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் ஜப்பானில் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் யோசனையை ஊக்குவித்து வருகின்றனர். கிராமத்தை விட்டு வெளியேறியவுடன் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

டோக்கியோ 2020 இன் அமைப்பாளர்கள் நான்கு ஆணுறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 160,000 ஆணுறைகளை வழங்கி உள்ளனர்.

ஆணுறைகளை விநியோகிப்பது விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல, ஆனால் விளையாட்டு வீரர்கள்  (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்)  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று அமைப்பாளர்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் ஒரு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கையை அறிமுகபடுத்தி உள்ளனர். இது விளையாட்டு வீரர்கள்  நெருக்கத்தை குறைக்க  ஊக்கப்படுத்தும்.

தற்போது வீரர்களுக்கு  'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன, மேலும் அவை ஒரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியானது.

இதுகுறித்து அமெரிக்க தொலைதூர ஓட்டப்பந்தய்வீரர்  பால் செலிமோ  தனது டுவிட்டரில் படுக்கையின் படங்களை பகிர்ந்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் படுக்கைகள்  அட்டைப் பெட்டியால் தயாரிக்கபட்டு வழங்கப்படுகிறது. இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுகளுக்கு அதுபோன்ற  சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு படுக்கைகள் ஒரு தனி நபரின் எடையை மட்டுமே  தாங்க கூடியதாக உள்ளது.

படுக்கை இடிந்து விழுந்தால் தரையில் தூங்க வேண்டும். இந்த நேரத்தில் நான் தரையில் எப்படி தூங்குவது என பயிற்சி செய்யத் தொடங்குவேன்; காரணம் என் படுக்கை இடிந்து விழுந்தால், தரையில் தூங்குவதற்கான பயிற்சி எனக்கு இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் என்று அழைக்கப்படுபவை பற்றிய தகவல்கள் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க. அயர்லாந்து  ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்லெனகன் படுக்கை  தரமற்றது ஒருவரது எடையை தாங்காது என குதித்து அது குறித்த வீடியோவை தனது  சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 

படுக்கைகள் பாலியல் எதிர்ப்பு என்று கூறுகிறார்கள்.. அவை அட்டைப் பெட்டியால் ஆனவை, ஆம், ஆனால் அவை திடீர் அசைவுகளை உடைக்க வேண்டும் என்பதற்கே ஆகும். இது போலியானது - போலி செய்தி!" என டுவிட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் மெக்லெனகன் கூறி உள்ளார்.

நியூயோர்க் போஸ்ட்டில் வெளியான ஒரு செய்தியில்  அமெரிக்க தொலைதூர ஓட்டப்பந்தய வீரர் பால் செலிமோவின் டுவீட்டை சுட்டி காட்டி  டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில்  அட்டைப் படுக்கைகள் வலிமையானவை" என்று உறுதியளித்தனர்.

அதிகாரபூர்வ ஒலிம்பிக் டுவிட்டரில்  மெக்லெனகனுக்கு "கட்டுக்கதைகளைத் துண்டித்ததற்காக" நன்றி தெரிவித்தது, "நிலையான படுக்கைகள் உறுதியானவை என கூறப்பட்டு உள்ளது.

அட்டை படுக்கைகளின் உற்பத்தியாளரான ஏர்வேவ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது:-

இந்த ட்டை படுக்கைகள்  200 கிலோகிராம் (440 பவுண்டுகள்) தாங்க கூடியது.படுக்கைகளின் மேல் எடையை குறைப்பது போன்ற சோதனைகளை நாங்கள் நடத்தியுள்ளோம்


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் இரண்டு வீரர்கள் உட்பட, 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். பாதிப்பு மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.
2. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.
4. மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998 ஆக பதிவு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.