பிற விளையாட்டு

கடற்கரை கைப்பந்து போட்டியில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடிய பெண்கள் அணிக்கு அபராதம் + "||" + Completely ridiculous Norwegian women's beach handball team fined for not playing in bikinis Twitter explodes

கடற்கரை கைப்பந்து போட்டியில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடிய பெண்கள் அணிக்கு அபராதம்

கடற்கரை கைப்பந்து போட்டியில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடிய பெண்கள் அணிக்கு அபராதம்
கடற்கரை கைப்பந்து விதிகள் பெண்கள் டாப்ஸ் மற்றும் பிகினி கீழாடை அணிய வேண்டும் என்றும். ஆண்கள் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸை அணியவும் வலியுறுத்துகிறது
ஒஸ்லோ

பல்கேரியாவில்  ஐரோப்பிய  கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நார்வே பெண்கள் அணி   பிகினி கீழாடைக்கு பதிலாக  ஷார்ட்ஸ் அணிந்து விளையாடினர். இதற்காக  நார்வேயின் பெண்கள் கடற்கரை கைப்பந்து அணிக்கு 1,500 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.13.12 லட்சம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில்  எதிர்ப்பு எழுந்து வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நார்வே கைப்பந்து கூட்டமைப்பும்  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  "நாங்கள்  உங்களுக்கு பின்னால் நின்று உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். ஆடைகளுக்கான விதிகளை மாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், இதனால் வீரர்கள் அவர்கள் வசதியாக இருக்கும் ஆடைகளில் விளையாட முடியும், ”என்று அது மேலும் கூறி உள்ளது.

அந்த நாட்டின் விளையாட்டு துறை  மந்திரி ஆபிட் ராஜா இது “முற்றிலும் அபத்தமானது” என்று கூறி உள்ளார்.

கடற்கரை கைப்பந்து  விதிகள் பெண்கள்  டாப்ஸ் மற்றும் பிகினி கீழாடை அணிய வேண்டும் என்றும். ஆண்கள் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸை அணியவும் வலியுறுத்துகிறது.