பிற விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் அணியை உற்சாகப்படுத்த ரசிகர்களை ஒன்று திரட்டும் பிரசாரம்; எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் தொடங்கியது + "||" + MPL sports foundation launches a campaign to cheer the Indian Olympic Contingent

இந்திய ஒலிம்பிக் அணியை உற்சாகப்படுத்த ரசிகர்களை ஒன்று திரட்டும் பிரசாரம்; எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் தொடங்கியது

இந்திய ஒலிம்பிக் அணியை உற்சாகப்படுத்த ரசிகர்களை ஒன்று திரட்டும் பிரசாரம்; எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் தொடங்கியது
இந்தியாவின் முன்னணி ஆன் லைன் விளையாட்டு தளமான மொபைல் பிரீமியர் லீக்கின் (எம்.பி.எல்.) சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகள் பிரிவான எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கும் விளம்பர பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் ரசிகர்களை கைகோர்க்கும் நாடு தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பிரசாரம் அமையும். இந்திய ஒலிம்பிக் பேன் ஆர்மியும் இந்த முயற்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்.பி.எல். இணை நிறுவனர் சாய் சீனிவாஸ் கூறுகையில், ‘உலகின் அனைத்து எல்லைகளையும் கடந்த மாபெரும் ஒரு விளையாட்டாக ஒலிம்பிக் இருக்கிறது. இந்த போட்டியில் நம் அனைவரையும் பிரதிநிதித்துவம்படுத்தும் நம் நாட்டின் விளையாட்டு வீரர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களை உற்சாகப்படுத்தி நமக்காக பதக்கங்களை வென்று வரும் போது, அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவும் அணிவகுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் இந்த ‘பேன் பான் ஜாவ்ஜே’ இயக்கம் அனைத்து இந்தியர்களையும் இந்திய ஒலிம்பிக் அணியின் ரசிகர்களாக மாற்றும் என்று நம்புகிறோம்’ என்றார். இதையொட்டி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீரர் பஜரங் பூனியா வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் மற்றும் பல நட்சத்திரங்களுடன் பல மொழிகளில் இந்த பிரசாரம் படம் எடுக்கப்பட்டு உள்ளது.