பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: துடுப்பு படகு போட்டி முடிவுகள் + "||" + Tokyo Olympics Rowing Results

டோக்கியோ ஒலிம்பிக்: துடுப்பு படகு போட்டி முடிவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்: துடுப்பு படகு போட்டி முடிவுகள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று துடுப்பு படகு போட்டியின் முதல் சுற்று நடைபெற்று வருகிறது.
டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு துவக்கவிழா நடைபெறுகிறது.

இதற்கிடையில், துவக்கவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி போட்டிகள், தகுதிச்சுற்றுபோட்டிகள் என பல்வேறு கட்டங்களாக போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், துடுப்பு படகு போட்டியின் முதல்சுற்றுகள் இன்று நடைபெற்றது. ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 பிரிவுகள், பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 பிரிவுகள், ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 பிரிவுகள், பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 பிரிவுகள் ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 பிரிவுகள், பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 பிரிவுகளாக இன்று போட்டி நடைபெற்றது.

துடுப்பு படகு போட்டி சிங்கிள் ஸ்கல்ஸ் (ஆண்கள் \ பெண்கள்) 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 6 வீரர்\வீராங்கனைகள் என மொத்தம் 36 வீரர்\வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்\விராங்கனைகள் (மொத்தம் 18 பேர்) காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 

துடுப்பு படகு போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் கடைசி 3 இடங்களை பிடித்த வீரர்\வீராங்கனைகள் ரிபிசாஜ் சுற்றுக்கு செல்கின்றனர். ரிபிசாஜ் பிரிவில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம். 

துடுப்பு படகு போட்டி முடிவுகள் 

ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் மற்றும் நாடுகள் விவரம்: 

ஹீட் - 1

கிஜேடில் போர்ச் (நார்வே)
பெண்ட்ரஸ் பீட்டர்வெரி மோல்னர் (ஹங்கேரி)
லூகா வெத்ரின் ப்ரியரா (பிரேசில்)

ஹீட் - 2

ஸ்டிபென்ஸ் டோஸ்கஸ்(கீரிஸ்)
ஜோர்டன் பெரி (நியூசிலாந்து)
அல்வரோ டோரஸ் மசியஸ் (பெரு)

ஹீட் - 3

ஸ்வெரி நெல்சன் (டென்மார்க்)
குனரோ அல்பர்டோ டி மௌரோ (இத்தாலி)
லடிஸ்லாவா ஹயோவல்வ் (கஜகஸ்தான்)

ஹீட் - 4

டிர்வர் ஜோன்ஸ் (கனடா)
மிண்டகஸ் கிஷ்ஹோனிஸ் (லிதுவெனியா)
ஓனட் கஷக்லி (துருக்கி)

ஹீட் - 5

ஹோமீர் மார்டின் (குரோஷியா)
அலெக்சாண்டர் யாசோவ்கின் (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி)
கிரிஸ் நிவெர்சி (பிலிப்பைன்ஸ்)

ஹீட் - 6 

ஒலிவ் சிட்லர் (ஜெர்மனி)
யுடா ரஹவா (ஜப்பான்)
அப்துல்ஹலித் ஹில்பனா (எகிப்து)

பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மற்றும் நாடுகள் விவரம்: 

ஹீட் - 1

கீரா ஹோட்லர் (அமெரிக்கா)
டட்சியானா லிமோசிவ் (பெலாரஸ்)
நசானின் மலஇவ் (ஈரான்)

ஹீட் - 2

சண்ட்னா புஷ்புயூர் (அயர்லாந்து)
கினியா லிஷுஹா (மெக்சிகோ)
அனீடா யுர்டியூ (கிரீஸ்)

ஹீட் - 3

ஹனா பிரகஸ்டீன் (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி)
யன் ஜியங் (சீனா)
விரோனிகா டூரோ அரனா (பெரூடா ரிகா)

ஹீட் - 4

விக்டோரியா தோர்ன்லி (கிரேட் பிரிட்டன்)
ஜீனைன் மினின் (சுவிஸ்சர்லாந்து)
லோவிசா கிளாசன் (ஸ்வீடன்)

ஹீட் - 5

மெக்டலினா லோபிங் (ஆஸ்திரியா)
கர்லின் சீமென் (கனடா)
மெய்கி டைக்மென் (நபிபியா)

ஹீட் -6

இமா டுவிங் (நியூசிலாந்து)
அனா சாரா சோபியா ஸ்வாகர் (நெதர்லாந்து)
ஜூவானா அர்சிக் (செர்பியா)

ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்

ஹீட் - 1

பிரான்ஸ்
சீனா
ரஷிய ஒலிம்பிக் கமிட்டி

ஹீட் - 2

போலாந்து
சுவிஸ்சர்லாந்து
நியூசிலாந்து

ஹீட் - 3

நெதர்லாந்து 
கிரேட் பிரிட்டன்
ருமேனியா

பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்

ஹீட் - 1

நியூசிலாந்து
அமெரிக்கா
பிரான்ஸ்

ஹீட் - 2

ரூமெனியா
கனடா
இத்தாலி

ஹீட் - 3

நெதர்லாந்து
லுதுவேனியா
ஆஸ்திரேலியா

குவாட்ருபெல் ஸ்கல்ஸ் பிரிவில் 2 ஹீட் சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் தலா 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு சுற்றிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி ஏ-க்கு தகுதி பெறுகின்றன.

ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 2 இடம் பிடித்து இறுதி ஏ-பிரிவுக்கு தகுதி பெற்ற  நாடுகள்

ஹீட் - 1

நெதர்லாந்து
ஆஸ்திரேலியா
 
ஹீட் - 2

போலாந்து
இத்தாலி

 
பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 2 இடம் பிடித்து இறுதி ஏ-பிரிவுக்கு தகுதி பெற்ற  நாடுகள்

ஹீட் - 1

ஜெர்மனி
நெதர்லாந்து

ஹீட் - 2

சீனா
போலாந்து

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.