பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று... + "||" + Tokyo Olympics: India's schedule on July 24

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
துப்பாக்கி சுடுதல்

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்: அபூர்வி சண்டிலா, இளவேனில். தகுதி சுற்று அதிகாலை 5 மணி, இறுதி சுற்று: காலை 7.15 மணி.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்: சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா. தகுதி சுற்று காலை 9.30 மணி, இறுதி சுற்று: பகல் 12 மணி.

பேட்மிண்டன்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் லீக் சுற்றில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீன தைபேயின் யாங் லீ-சி லின் வாங் ஜோடியுடன் மோதல், காலை 8.50 மணி.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் சாய் பிரனீத், இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மானுடன் பலப்பரீட்சை, பகல் 9.30 மணி.

ஆக்கி

இந்தியா-நியூசிலாந்து (ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம்), காலை 6.30 மணி.

இந்தியா-நெதர்லாந்து (பெண்கள் பிரிவு லீக் ஆட்டம்), மாலை 5.15 மணி.

வில்வித்தை

கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்று: பிரவின் ஜாதவ்-தீபிகா குமாரி ஜோடி பங்கேற்பு, காலை 6 மணி முதல்.

பளுதூக்குதல்

பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவு: மீராபாய் சானு. தகுதி சுற்று காலை 6.20 மணி, இறுதி சுற்று காலை 10.20 மணி.

ஜூடோ

பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு: சுஷிலா தேவி, ஹங்கேரியின் செர்னோ விக்கியுடன் மோதல், காலை 7.30 மணி முதல்.

டேபிள் டென்னிஸ்

கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா-சரத்கமல்-சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் மோதல் (காலை 8.30 மணி), பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா-இங்கிலாந்தின் ஹோ டின்  டின்னுடன் சந்திப்பு (பகல் 12.15 மணி), சுதிர்தா முகர்ஜி-சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுடன் மோதல் (பகல் 1 மணி).

துடுப்பு படகு

ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவின் தகுதி சுற்றில் அர்ஜூன் லால் ஜாட்-அரவிந்த் சிங் பங்கேற்பு, காலை 7.50 மணி முதல்.

குத்துச்சண்டை

ஆண்களுக்கான தொடக்க சுற்றில் விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ)-ஜப்பானின் மென்சா ஒக்காஜாவா, மாலை 3.54 மணி.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
2. ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.
3. இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
4. “இந்தியா போட்டியை இழந்தது” என வெளியிட்ட அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா அச்சுறுத்தால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.