பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Table tennis: India's Sudirta Mukherjee, Manika Bhadra advance to second round

டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். 

முன்னதாக டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்கொண்டார். முதல் நான்கு கேம்ஸ்களையும் 11-7, 11-6, 12-10, 11-9 என கைப்பற்றி கிரேட் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுவை 4-3 என்ற செட் கணக்கில் (11-5, 9-11, 13-11, 11-9, 3-11, 9-11, 5-11) வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வழக்கு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
இந்தியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு செப்டம்பர் மாதம் கத்தாரில் நடக்கும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த வாரம் அறிவித்தது.
2. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
3. ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.
4. இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
5. “இந்தியா போட்டியை இழந்தது” என வெளியிட்ட அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா அச்சுறுத்தால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.