ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி


ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி
x
தினத்தந்தி 26 July 2021 1:39 AM GMT (Updated: 26 July 2021 3:11 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றிபெற்றார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை முதல் வாள்வீச்சு விளையாட்டுக்கான முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். அவர் துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஜிசியை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதலே பவானி தேவி ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிய வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் வாள்வீச்சு தனிநபர் சாப்ரே பிரிவில் அடுத்த சுற்றுக்கு பவானிதேவி முன்னேறியுள்ளார்.

இரண்டாவது சுற்றான டேபிள் 32 பிரிவில் பவானிதேவி பிரான்ஸ் வீராங்கனை பென்னெட்டை எதிர்கொள்கிறார். இருவரும் மோதும் போட்டி இன்றே (காலை 8 மணியளவில்) நடைபெறுகிறது.

Next Story