பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் வெளியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை + "||" + Exit from the Swords at the Olympics: Apologizing Tamil Nadu Athlete

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் வெளியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் வெளியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை
ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் வெளியேறிய தமிழக வீராங்கனை மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வாள்வீச்சு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். அவர் தனது முதல் சுற்றில் துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஜிசியை 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம், இரண்டாவது சுற்றான டேபிள் 32 சுற்றுக்கு முன்னேறினார்.

டேபிள் 32 சுற்றில் அவர் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை மனோன் பெர்னெட்டை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே பெர்னெட் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்னெட் வெற்றிபெற்றார். 7 புள்ளிகளை பெற்ற பவானிதேவி தோல்வியடைந்தார். இதனால், பவானிதேவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை
இழந்தார்.

இந்நிலையில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தமிழக வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன். எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எல்லா முடிவுகளுக்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் வலிமையுடன் வருவேன். எனது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
3. மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒலிம்பிக் தங்கப்பதக்கம் !
கோலாகலம்.. இங்கு கொண்டாட்டம்.. என்று, உலகமே ரசித்து பார்த்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்திருக்கிறது.
4. டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனையும்....ஏமாற்றமும்...!
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனை, சுவாரஸ்யம், ஏமாற்றங்கள் பற்றிய ஒரு அலசல்.
5. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.