ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...


ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
x
தினத்தந்தி 26 July 2021 10:59 PM GMT (Updated: 26 July 2021 10:59 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று: சவுரப் சவுத்ரி-மானு பாகெர், அபிஷேக் வர்மா-யஷாஸ்வினி தேஸ்வால், அதிகாலை 5.30 மணி, இறுதி சுற்று: காலை 8.07 மணி.

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்று: திவ்யான்ஷ் சிங் பன்வார்-இளவேனில், தீபக்குமார்-அஞ்சும் மோட்ஜில், காலை 9.45 மணி, இறுதி சுற்று: பகல் 12.22 மணி.

ஆக்கி

இந்தியா-ஸ்பெயின் (ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம்), காலை 6.30 மணி.

பேட்மிண்டன்

ஆண்கள் இரட்டையர் பிரிவு லீக் சுற்றில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி-பென் லான்-சீன் வென்டி (இங்கிலாந்து), காலை 8.30 மணி.

டேபிள் டென்னிஸ்

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் சரத்கமல்-மா லாங் (சீனா), காலை 8.30 மணி.

பாய்மர படகு

பெண்களுக்கான லேசர் ரேடியல் தகுதி சுற்று: நேத்ரா குமணன், காலை 8.35 மணி முதல்.

ஆண்களுக்கான லேசர் ஸ்டான்டர்டு தகுதி சுற்று: விஷ்ணு சரவணன், காலை 8.45 மணி முதல்.

ஆண்களுக்கான ஸ்கிப் 49 இஆர் தகுதி சுற்று: கணபதி-வருண் தக்கர், காலை 11.20 மணி முதல்.

குத்துச்சண்டை

பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் முதலாவது சுற்றில் லவ்லினா போர்கோஹைன்-நாடின் அபெட்ஸ் (ஜெர்மனி), காலை 10.57 மணி.

Next Story