பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு + "||" + Olympics: Tokyo records 2,848 Covid-19 cases on July 27, highest single-day spike since pandemic began

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஒலிம்பிக்  போட்டி நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு
டோக்கியோ நகரில் உள்ள மொத்தம் உள்ள 12,635 கொரோனா நோயாளிகளில் 20.8 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ  நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு  அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2848 புதிய  கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைப் பதிவுசெய்து உள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜப்பானிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா  பாதிப்பு அதிக எண்ணிக்கையில்  பதிவாகி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

நகரில் உள்ள மொத்தம் உள்ள  12,635 கொரோனா  நோயாளிகளில் 20.8 சதவீதம்  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்டவர்கள்  7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களில் 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளனர், இது நகரத்தின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக சரியான தடை  விதிகள் இருந்தபோதிலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட 155 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,80 கோடியை தாண்டியது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,75 கோடியை தாண்டியது.
3. இங்கிலாந்தில் 75 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் புதிதாக 31,564 கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,97 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,64 கோடியை தாண்டியது.