பிற விளையாட்டு

ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி + "||" + Israel Beats India in Olympics Men's Individual Archery Elimination Round Match

ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி

ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்து அடுத்தசுற்று வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது. 1\32, 1\16, 1\8 என மூன்று பிரிவுகளாக வெளியேற்றுதல் சுற்று நடைபெறும். 1\32 வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெறும் வீரர்கள் அடுத்த சுற்றான 1\16 வெளியேற்றுதல் சுற்றுக்கு முன்னேறுவார்கள். 1\16 வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெறும் வீரர்கள் அதற்கு அடுத்த சுற்றான 1\8 சுற்றில் மோதுவார்கள். 1\8 சுற்றில் வெற்றிபெறும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள். 

அந்தவகையில், ஆண்கள் வில்வித்தை தனிநபர் 1\32 வெளியேற்றுதல் சுற்று இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்சை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில், ஒலெக்சி ஹன்பின்சை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தருண்தீப் ராய் அடுத்த சுற்றான 1\16 வெளியேற்றுதல் சுற்றுக்கு
முன்னேறினார்.

இதையடுத்து, 1\16 வெளியேற்றுதல் சுற்றில் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரர் இடலி ஷன்னி என்பவரை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இரு வீரர்களும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில், தருண்தீப் ராயை 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இஸ்ரேல் வீரர் இடலி ஷன்னி வெற்றிபெற்றார். இதனால், இந்திய வீரர் தருண்தீப் சிங் ஆண்கள் வில்வித்தை தனிநபர்
பிரிவில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு தகுதி
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி 5-0 கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.