பிற விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம் + "||" + Indian Badminton Nandu Natekar Dies At 88

இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம்

இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம்
இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரரான நந்து நடேகர் (வயது 88) மராட்டிய மாநிலம் புனேயில் வசித்து வந்தார். வயது முதிர்வால் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார்.
1956-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வாகை சூடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற நந்து நடேகர் 100-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர், இந்திய பேட்மிண்டன் சங்கம் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
இந்திய பேட்மிண்டன் அரைஇறுதியில் சிந்து தோல்வி அடைந்தார்.