ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...


ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
x
தினத்தந்தி 29 July 2021 8:51 PM GMT (Updated: 29 July 2021 8:51 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைககள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு.

துப்பாக்கி சுடுதல்

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் (ரேபிட்) தகுதி சுற்று: மானு பாகெர், ராஹி சர்னோபாத், அதிகாலை 5.30 மணி. இறுதி சுற்று: காலை 10.30 மணி.

வில்வித்தை

பெண்களுக்கான தனிநபர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தீபிகா குமாரி-செனியா பெரோவா (ரஷியா), காலை 6 மணி.

தடகளம்

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தகுதி சுற்று: அபினாஷ் முகுந்த், காலை 6.17 மணி.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் தகுதி சுற்று: எம்.பி.ஜாபிர், காலை 8.27 மணி.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய தகுதி சுற்று: டுட்டீ சந்த், காலை 8.45 மணி.

கலப்பு அணிகளுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் தகுதி சுற்று: ரேவதி, சுபா, அலெக்ஸ் அந்தோணி, சர்தாக் பாம்ப்ரி, மாலை 4.42 மணி.

ஆக்கி

இந்தியா-அயர்லாந்து (பெண்கள் ), காலை 8.15 மணி.

இந்தியா-ஜப்பான் (ஆண்கள்), பிற்பகல் 3 மணி.

குத்துச்சண்டை

பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சிம்ரன்ஜித் கவுர்-சுதாபோர்ன் சீசன்டீ (தாய்லாந்து), காலை 8.18 மணி.

பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதி சுற்றில் லவ்லினா போர்கோஹைன்-நின் சின் சென் (சீன தைபே), காலை 8.48 மணி.

பாய்மர படகு

பெண்களுக்கான லேசர் ரேடியல் தகுதி சுற்று: நேத்ரா குமணன், காலை 8.35 மணி முதல்.

ஆண்களுக்கான ஸ்கிப் 49 இஆர் தகுதி சுற்று: கணபதி-வருண் தக்கர், காலை 8.35 மணி முதல்.

லேசர் ஸ்டான்டர்டு தகுதி சுற்று: விஷ்ணு சரவணன், காலை 11.05 மணி முதல்.

கோல்ப்

தனிநபர் 2-வது சுற்று: அனிர்பன் லஹிரி, காலை 8.52 மணி, உதயன் மானே, காலை 11.09 மணி.

பேட்மிண்டன்

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால்இறுதி சுற்றில் பி.வி.சிந்து-அகானே யமாகுச்சி (ஜப்பான்), பகல் 1.15 மணி.

குதிரையேற்றம்

பவாத் மிர்சா, பகல் 2 மணி.

Next Story