டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து நாடு திரும்பியுள்ளார்.
புதுடெல்லி,
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி சிந்து அசத்தினார். டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்கு இன்று திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற 2-ஆவது இந்திய போட்டியாளா் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.