200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று ஜமைக்கா வீராங்கனை சாதனை


200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று ஜமைக்கா வீராங்கனை சாதனை
x
தினத்தந்தி 3 Aug 2021 10:31 PM GMT (Updated: 2021-08-04T04:01:21+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று ஜமைக்கா வீராங்கனை சாதனை படைத்தார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் ஹெரா 21.53 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தாம்சன் 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று இருந்தார். அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். இதன் மூலம் தாம்சன் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் ஒருசேர தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.

Next Story