பிற விளையாட்டு

கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறோம்-மன்பிரீத் சிங் + "||" + Corona prevention For frontline employees We dedicate the medal Manpreet Singh

கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறோம்-மன்பிரீத் சிங்

கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறோம்-மன்பிரீத் சிங்
வெண்கலப்பதக்கத்தை முத்தமிட்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில்,
‘நாங்கள் 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்து அருமையாக போராடி மீண்டு வந்தோம். இந்த பதக்கத்துக்கு நாங்கள் தகுதியானவர்கள். இந்த போட்டிக்காக நாங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறோம். கடந்த 15 மாதங்கள் எங்களுக்கு கடினமாக இருந்தது. பெங்களூருவில் நடந்த பயிற்சியின் போது சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் உயிர்களை காத்து வரும் டாக்டர்கள், சுகாதார துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறோம்’ என்றார்.

இந்திய அணி வீரர் ருபிந்தர் பால்சிங் கூறுகையில், ‘இந்தியாவில் மக்கள் ஆக்கியை ஏறக்குறைய மறந்து விட்டார்கள். அவர்கள் ஆக்கியை நேசித்தாலும், எங்களால் பதக்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நிறுத்தி விட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் இன்று வெற்றி பெற்று இருக்கிறோம். வருங்காலத்தில் எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைப்பார்கள். அதனை நிறைவேற்றும் திறமை இந்த அணிக்கு இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஆக்கி நமது நாட்டில் மேலும் பிரபலம் அடையும் என்று நம்புகிறேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு; கூடுதல் டோஸ், குழந்தைகளுக்கு தடுப்பூசி பற்றி நாளை ஆலோசனை
கொரோனா தடுப்புக்கான கூடுதல் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவது பற்றி நாளை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.