ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்று கடைசி போட்டிகள்: ஈட்டி எறிதலில் அசத்துவாரா நீரஜ் சோப்ரா?


ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்று கடைசி போட்டிகள்: ஈட்டி எறிதலில் அசத்துவாரா நீரஜ் சோப்ரா?
x
தினத்தந்தி 7 Aug 2021 2:22 AM GMT (Updated: 2021-08-07T07:52:34+05:30)

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

டோக்கியோ, 

பதக்கப்பட்டியலில் டாப்-3 இடங்களை சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆக்கிரமித்துள்ளன. இந்தியா இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றாலும் இந்தியாவுக்குரிய போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இன்றைய நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா களம் இறங்குகிறார். கோல்ப் பெண்கள் பிரிவில் 2-வது இடத்தில் நீடிக்கும் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் கடைசி ரவுண்டில் விளையாட உள்ளார்.

மற்றொரு எதிர்பார்ப்புக்குரிய போட்டியான ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு அரங்கேறுகிறது. இதில் 12 வீரர்களில் ஒருவராக இந்தியாவின் 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் மற்றவர்களை விட அதிகபட்சமாக 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்திய நீரஜ்சோப்ரா, தனது முழு திறமையை வெளிக்காட்டினால் நிச்சயம் பதக்கமேடையில் ஏற முடியும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும்.

Next Story