பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது + "||" + With the Tokyo Olympics today The matches for India are coming to an end

டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மல்யுத்தம்,ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன.

இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது. இன்றைய நாளில் 2 பதக்கங்களை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது.

மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா களம் இறங்குகிறார். கோல்ப் பெண்கள் பிரிவில் 2-வது இடத்தில் நீடிக்கும் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் கடைசி ரவுண்டில் விளையாடினார்.இந்திய வீராங்கனை அதிதி  அசோக் 4ம் இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை தவற விட்டார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் திறமையாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்த நீரஜ் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்திய நேரப்படி மாலை 4.30 இந்த போட்டி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
3. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
4. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.