பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது + "||" + The Olympics end today

ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது

ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது.
டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. 205 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகிறது.

போட்டிகள் முடிந்ததும் நிறைவு விழா நடைபெறும். அதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். போட்டி நிறைவு விழா முடிவில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024-ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி பதக்க பட்டியலில் சீனா 38 தங்கம், 31 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 36 தங்கம், 39 வெள்ளி, 33 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.