பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை + "||" + Tokyo Olympics: 42 km Kenyan distance marathon record

டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்:  42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன.  இறுதி நாளான இன்று கடைசி தடகள போட்டியாக மாரத்தான் போட்டி நடந்தது.

இதில், 42 கிலோ மீட்டர் தூர இலக்கை கொண்ட ஆடவர் பிரிவு போட்டியில், மொத்தம் 106 வீரர்கள் கலந்து கொண்டனர்.  அவர்களில் 76 பேர் மட்டுமே இலக்கை கடந்தனர்.

இந்த போட்டியில், கென்ய வீரர் எலியட் கிப்சாஜ், 2 மணி நேரம் 8 நிமிடம், 38 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.  நெதர்லாந்து வீரர் அப்தி நாகியே 2வது இடமும், பெல்ஜியம் வீரர் பஷீர் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

கென்ய வீரர் எலியட் கிப்சாஜ், தொடர்ந்து 2வது முறை ஒலிம்பிக் மாரத்தானில் தங்க பதக்கம் வென்று சாதித்துள்ளார்.  அதனுடன், ஒலிம்பிக் மாரத்தானில் தொடர்ந்து 2வது முறை பதக்கம் வென்ற 3வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன் எத்தியோப்பியாவின் அபிபி பிகிலா, ஜெர்மனியின் சியர்பின்ஸ்கி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதேபோன்று மகளிருக்கான மாரத்தான் போட்டியில் கென்யா நாட்டின் பெரஸ் ஜெப்சிர்சீர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.  இதனால், கென்யாவுக்கு ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு மாரத்தான் போட்டிகளில் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை
திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரோகித் சர்மா புதிய சாதனை
ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, அணி ஒன்றுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
3. 100 சதவீதம் தடுப்பூசி போட்டு நீலகிரி மாவட்டம் சாதனை!
வேகமாக செல்லும் அதிவேக விரைவு ரெயில், வழியில் ஏதாவது ஒரு இடத்தில் ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டாலோ, சீரமைக்கும் பணிகள் நடந்தாலோ, நத்தை வேகத்தில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
4. வரலாறு படைத்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.‌
5. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை.