பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனையும்....ஏமாற்றமும்...! + "||" + Achievement at the Tokyo Olympics .... and disappointment ...!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனையும்....ஏமாற்றமும்...!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனையும்....ஏமாற்றமும்...!
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனை, சுவாரஸ்யம், ஏமாற்றங்கள் பற்றிய ஒரு அலசல்.
டோக்கியோ,

32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனை, சுவாரஸ்யம், ஏமாற்றங்கள் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

பட்டியலில் 93 நாடு

*பதக்கப்பட்டியலில் மொத்தம் 93 நாடுகள் இடம் பிடித்தன. அதிக நாடுகள் பதக்கம் வென்ற ஒலிம்பிக் இது தான். இதில் 65 நாடுகள் தங்கம் வென்றுள்ளன. பெர்முடா, கத்தார், பிலிப்பைன்ஸ் நாடுகள் ஒலிம்பிக்கில் முதல்முறையாக தங்கப்பதக்கத்தை சுவைத்தன.


*கடைசி நாளில் பெண்களுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, சைக்கிளிங் ஆகியவற்றில் கிடைத்த 3 தங்கப்பதக்கத்தின் மூலம் சீனாவை முந்தி அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. 39 தங்கம் உள்பட 113 பதக்கங்களை அந்த நாடு அள்ளியிருக்கிறது. இதில் வீராங்கனைகள் மட்டும் 66 பதக்கங்களை குவித்து இருக்கிறார்கள். இருப்பினும் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது அந்த நாடு வென்ற தங்கத்தின் எண்ணிக்கை 7 குறைவாகும். இந்த ஒலிம்பிக்கில் தடகளத்தில் ஒரு அமெரிக்க வீரர் கூட தங்கம் வெல்லவில்லை. இதே போல் 5 தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் மன அழுத்தத்தால் விலகியது இந்த பின்னடைவுக்கு காரணமாகும். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா நம்பர் ஒன் இடத்தை பெற்றிருப்பது இது 18-வது முறையாகும்.

இளமையும், முதுமையும்...

*சீனா 38 தங்கம் உள்பட 88 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கம் உள்பட 58 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. ஜூடோவில் மட்டும் 9 தங்கத்தை வாரி சுருட்டியதாலேயே ஜப்பானால் டாப்-3-க்குள் நிலை கொள்ள முடிந்தது.

*இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கத்துடன் 48-வது இடத்தை பிடித்தது.

*இந்த ஒலிம்பிக்கில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் ஜப்பான் வீராங்கனை கோகோனா ஹிராகி. 12 வயதான அவர் ஸ்கேட்போர்டிங் பார்க் பிரிவில் வெள்ளி வென்றார். ஆஸ்ரேலியாவின் குதிரையேற்ற பந்தய வீரர் ஆண்ட்ரூ ஹாய் தனது 62-வது வயதில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவரே நடப்பு ஒலிம்பிக்கில் அதிக வயதில் பதக்கம் வென்றவர் ஆவார்.

*அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் 5 தங்கப்பதக்கம் வென்றும், ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் 7 பதக்கங்களை (4 தங்கம், 3 வெண்கலம்) குவித்தும் தனிநபரில் முத்திரை பதித்தனர்.

‘நம்பர் ஒன்’ ஏமாற்றங்கள்

*இந்த ஒலிம்பிக்கில் ஏமாற்றங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆண்கள் டென்னிசில் இந்த ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி ‘கோல்டன்ஸ்லாம்’ கனவுடன் ஒலிம்பிக்குக்கு வந்த ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) அரைஇறுதியில் தோற்று பதக்கமின்றி வெளியேறினார். 2-ம் நிலை டென்னிஸ் வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா, நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரர் கென்டோ மோமோட்டா ஆகியோரின் ஒலிம்பிக் பதக்க கனவும் தொடக்க கட்டத்திலேயே தகர்ந்து போனது. உலக கோப்பை போட்டிகளில் கலக்கிய இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் பங்கேற்ற 3 பிரிவுகளிலும் சொதப்பினார்.

ஆண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வீரர் நோவா லைலெஸ், 100 மீட்டர் ஓட்டத்தில் மிரட்டுவார் என்று கணிக்கப்பட்டிருந்த டிராவோன் புரோமெல் ஆகியோரும் சோபிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.
3. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
4. மும்பை மேயர் பதவிக்கு சோனு சூட் போட்டி?
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் நடை பயணமாக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
5. அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு
அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு கூடுதல் டி.ஜி.பி. வழங்கினார்.