பிற விளையாட்டு

டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர் + "||" + French marathon runner for deliberately KNOCKING OVER row of water bottles so his rivals couldnt drink

டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்

டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 26 மைல் தூரத்திற்கான மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோர்ஹட் அம்டவுனி என்பவரும் 1 ஓடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வீரர்களுக்கு குடிப்பதற்காக சாலையோரத்தில் குடிநீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில வீரர்கள் குடிப்பதற்கு பாட்டில்களை எடுத்த போது, பிரான்ஸ் வீரர் மட்டும் அடிக்கு வைத்திருந்த பாட்டில்களைத் மற்றவர்கள் எடுக்க விடாமல் தட்டி விட்டார்.

இதனால் பின்னால் வந்த மற்ற வீரர்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடினர். மோர்ஹட்டின் இந்தச் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.ஆஸ்திரேலிய நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் இந்த சம்பவத்தை கவனித்து அதை சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி உள்ளார்.

வெற்றி பெற்ற கென்யா வீரர் எலியூட் கிப்சோஜே தங்கம் வென்றார்.நெதர்லாந்தின் அப்டி நாகீய் வெள்ளியும், பெல்ஜியத்தின் பஷீர் அப்டி வெண்கலமும் வென்றனர்.  அம்தவுனி 14 வது இடத்தைப் பிடித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.
5. கடின உழைப்பும்,அனைவரின் ஆதரவுமே நான் தங்கம் வெல்ல காரணம் - நீரஜ் சோப்ரா
கடின உழைப்பாலேயே ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதாக ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.