நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு


நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு
x
தினத்தந்தி 15 Aug 2021 2:33 AM GMT (Updated: 2021-08-15T08:03:59+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடந்த திங்கட்கிழமை தாயகம் திரும்பினார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சில பாராட்டு விழாக்களில் பங்கேற்ற 23 வயதான நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடலில் வெப்பம் 103 டிகிரி வரை இருந்தது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வரும் அவருக்கு டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது.

Next Story