பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு தடை


பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு தடை
x
தினத்தந்தி 17 Aug 2021 1:58 AM GMT (Updated: 2021-08-17T07:28:17+05:30)

சமீபத்தில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

டோக்கியோ,

சமீபத்தில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கிலும் ரசிகர்கள் போட்டியை பார்க்க மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி அறிவித்துள்ளது. ஜப்பானில் தினசரி கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரசிகர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Next Story