பிற விளையாட்டு

பார்முலா1 கார் பந்தயம்: ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி ரத்து + "||" + F1: Japanese Grand Prix Cancelled For Second Year Over COVID-19

பார்முலா1 கார் பந்தயம்: ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி ரத்து

பார்முலா1 கார் பந்தயம்: ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி ரத்து
இந்த ஆண்டுக்கான ‘பார்முலா1’ கார் பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதுவரை நடந்துள்ள 11 சுற்றுகள் முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 195 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்த போட்டி தொடரின் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி அக்டோபர் 10-ந் தேதி அங்குள்ள சுசுகா ஓடுதளத்தில் நடக்க இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த போட்டியை ரத்து செய்வதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த போட்டி வேறு இடத்தில் நடைபெறுவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று ‘பார்முலா1’ போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு காரணமாக ஜப்பான் கிராண்ட்பிரி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பார்முலா1 கார் பந்தயம்: கத்தார் போட்டியில் ஹாமில்டன் முதலிடம்
கத்தாரில் நடைபெற்ற பார்முலா1 கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.