பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி + "||" + World Table Tennis: Manika Batra qualifies for the semi-finals

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி
உலக டேபிள் டென்னிஸ் தொடர் (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கான போட்டி) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 7-11, 11-1, 8-11, 13-11, 11-6 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா-சத்யன் இணை 11-6, 11-5, 11-4 என்ற நேர்செட்டில் பெலாரசின் அலியாக்சன்ட் ஹனின்-டாரியா டிரைகோலோஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சக வீராங்கனைக்காக விட்டுக்கொடுக்க வற்புறுத்தினார்: பயிற்சியாளர் மீது மனிகா பத்ரா பரபரப்பு புகார்
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று வரை மணிகா பத்ரா முன்னேறியிருந்தார்.
2. உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா-சத்யன் ஜோடி ‘சாம்பியன்’
உலக டேபிள் டென்னிஸ் போட்டி (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கானது) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிபோட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா-சத்யன் ஜோடி 11-9, 9-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டோரா மதராஸ்-நந்துர் எசேகி இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.