பிற விளையாட்டு

பவினா எங்களை பெருமைப்படுத்தி உள்ளார்; தந்தை பேட்டி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஊர்மக்கள் உற்சாகம் + "||" + Pavina is making us proud; Father: Fireworks explode, offering sweets and cheering

பவினா எங்களை பெருமைப்படுத்தி உள்ளார்; தந்தை பேட்டி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஊர்மக்கள் உற்சாகம்

பவினா எங்களை பெருமைப்படுத்தி உள்ளார்; தந்தை பேட்டி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஊர்மக்கள் உற்சாகம்
பவினா வெள்ளி பதக்கம் வென்று எங்களை பெருமைப்படுத்தி உள்ளார் என அவரது தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது.

இதில், சீன வீராங்கனை ஜாங் மியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் மற்றும் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஜோவ் யிங் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் பவினாபென் பட்டேல் போராடி தோற்றார்.  இதன் மூலம் பவினாபென் பட்டேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.  முதன்முறையாக மகளிர் டேபிள் டென்னிசில் இந்தியா சார்பில் வெள்ளி வென்று பவினா சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் தனது மகள் பெற்ற வெற்றி குறித்து அவரது தந்தையான ஹம்சுக்பாய் பட்டேல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பவினா எங்களை பெருமைப்படுத்தி இருக்கிறார்.  ஊருக்கு திரும்பும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க போகிறோம் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பவினா வெள்ளி பதக்கம் வென்று தந்த செய்தி அறிந்ததும் குஜராத்தின் மெஹ்சானா நகரில் அவரது வீட்டின் அருகே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

பவினாவின் நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் வழங்கியும் வெற்றியை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினார்கள்.  பவினாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது வெற்றியை கர்பா என்ற ஒரு வகை நடனம் ஆடி மகிழ்ந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திரிபுரா முதல்-மந்திரி ஒரு பயனற்ற நபர்; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.
திரிபுரா முதல்-மந்திரி ஒரு பயனற்ற மனிதர் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.
2. தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி; அமைச்சர் பேட்டி
தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி: உலகம் முழுமைக்கும் வழி காட்டிய இந்தியா; பிரதமர் மோடி
பெரிய அளவில் எப்படி தடுப்பூசி செலுத்துவது என உலக நாடுகளுக்கு இந்தியா வழி காட்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. தமிழகத்தில் கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும்: அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி
தமிழகத்தில் கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.
5. உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது.