டோக்கியோ பாரா ஒலிம்பிக்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் + "||" + #TokyoParalympics, Men's Javelin Throw: Sumit Antil wins gold (Sport Class F64) with World Record throw of 68.55m
டோக்கியோ பாரா ஒலிம்பிக்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 2-வது தங்கம்
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
டோக்கியோ,
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.
23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்.
மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா ( 19) அதிரடியாக விளையாடி தங்கம் வென்றுள்ளார்.
மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா ( 19) அதிரடியாக விளையாடி இன்று காலை தங்கம் வென்று இருந்தார்.