பிற விளையாட்டு

டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி + "||" + Rakesh Kumar qualifies for quarterfinals at Tokyo Paralympic Archery

டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில், இந்திய வீரர் ராகேஷ் குமார், சுலொவேகியா நாட்டின் மரியான் மரிசாக்கை 140-137 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  இன்று நடைபெறும் அடுத்த சுற்றில் அவர் விளையாடுகிறார்.

இதற்கு முன் நடந்த தகுதி நீக்க சுற்றில் ஹாங்காங்கின் காய் கா சூவென் என்பவரை 144-131 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டி நிறைவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது, ராகேஷ் அதிரடியாக  இலக்கை நோக்கி அம்புகளை அடித்து வெற்றி பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; இந்தியாவின் கிதம்பி முதல் சுற்றில் வெற்றி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிதம்பி சக வீரரான பிரணீத்துடன் விளையாடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
4. ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.