டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தோல்வி


டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தோல்வி
x
தினத்தந்தி 31 Aug 2021 5:49 AM GMT (Updated: 31 Aug 2021 5:49 AM GMT)

டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் 7வது இடம் பிடித்து தோல்வியடைந்து உள்ளார்.


டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இன்று நடந்த மகளிர் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதனை தொடர்ந்து நடந்த இறுதி போட்டியில் ரூபினா 128.5 புள்ளிகள் சேர்த்து 7வது இடம் பிடித்து உள்ளார்.  இதனால், பதக்கம் பெறாமல் அவர் தோல்வி அடைந்து உள்ளார்.  ஈரானின் சாரே ஜவான்மர்டி 239.2 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

அவருக்கு அடுத்து துருக்கி நாட்டை சேர்ந்த அய்சிகுல் பெஹ்லிவான்லர் வெள்ளி பதக்கமும், அங்கேரி நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா வெண்கலமும் வென்றுள்ளனர்.


Next Story